ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தரவுகளுக்கமைய, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் இந்தியாவுக்கான இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7.22% அதிகரித்து 669.36 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூலை காலப்பகுதியில் இந்த ஏற்றுமதி 624.31 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டன.

ஜூலை மாதத்தில் மாத்திரம் இந்தியாவுக்கான ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 9.12% அதிகரித்து 129.51 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. 2025 ஜூலையில் இது 118.69 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

இந்த ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கொதிகலன்கள், பிஸ்டன் என்ஜின்கள்,பெற்றோலிய எண்ணெய்கள், மிருகத் தீவனம் மற்றும் அடிப்படை உலோகப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்தமையே முக்கிய காரணம் என ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், தெற்காசிய பிராந்தியத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி பொதுவாக அதிகரித்ததன் விளைவாகவும் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இதேவேளை 2026 ஜனவரி-ஜூலை காலப்பகுதியில் தெற்காசிய சந்தைகளுக்கான ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 11.98% அதிகரித்து 916.55 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here