கல்கிஸ்சை – வட்டரப்பல பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் வெள்ளவத்தை, பொரளை, களுபோவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய குற்றத்திற்காக குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் உந்துருளியை செலுத்தியவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக சந்தேகநபர்கள் பயன்படுத்திய உந்துருளி ஹொரணை பகுதியில் இருந்து அண்மையில் மீட்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here