யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (08/03/2025) யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த  64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் வெள்ளிக்கிழமை (07/03/2025) அவரது வீட்டில் இருந்த கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியுள்ளார். இதனையடுத்து அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (08/03/2025) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாய பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here