இன்று 16.02.2025 கல்முனை பெரிய நீலாவணையில் பொதுமக்கள் ஏற்பாடு செய்து நடத்திய மதுபானசாலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் திடீரென வந்து அரசியல் செய்ய முற்பட்ட சுமந்திரன் சாணக்கியன் உள்ளிட்டோர் போராட்டக்காரர்களால் துரத்தியடிக்கப்பட்டனர்.
கல்முனை தொகுதி தமிழசு கட்சி செயலாளர் உள்ளிட்ட ஆதரவாளர்களே சுமந்திரன் சாணக்கியன் உள்ளிட்டோரை துரத்தியடித்தனர்.
துரத்தியடிக்கப்பட்ட சுமந்திரன் சாணக்கியன் உள்ளிட்ட குழுவினரை கோடீஸ்வரன் MP மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதுகாத்து அழைத்துச் சென்றனர்.
இதனால் அவமானப்பட்டு ஆத்தரமுற்ற சாணக்கியனும் தனது சகாவான கோழி வினோவும் இணைந்து போராட்டத்தை குழப்பி விடுகின்ற முயற்சி எடுத்திருந்தாலும் பொதுமக்களது ஒற்றுமையினால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது.
மீண்டும் சுமந்திரன் சாணக்கியன் தரப்போடு கைகோர்த்துக் கொண்டாரா கோடீஸ்வரன்???அல்லது சுமந்திரன் சாணக்கியனை திட்டமிட்டு பெரியநீலாவணை போராட்டத்திற்கு அழைத்து சென்று அவமானப்படுத்தினாரா??? போன்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுகின்றது.








