கொழும்பு கொம்பனி தெரு பகுதியிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரும் நேற்றைய தினம் (26) காவல்துறையில் சரணடைந்தனர்.

பின்னராக இவர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து இன்றைய தினம் (27) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது வழக்கை விசாரித்த நீதவான் இவர்கள் நால்வரையும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

யோஷித ராஜபக்ஷவுடன் இரவு நேர களியாட்ட விடுதிக்கு வருகை தந்த நால்வரே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here