கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் மற்றும் மண் கடத்தலில் ஈடுபட்ட கனரக வாகனங்கள் ஏ9 வீதியில் அனுமதி பத்திரம் அற்ற டிப்பர் வாகனங்கள், சட்டவிரோதமாக அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் அகழ்வுகள் மேற்கொண்டு டிப்பர் வாகனத்தில் ஏற்றி சட்டவிரோத அனுமதிபத்திரங்கள் தயரித்து மணல் ஏற்றி சென்றமைக்காகவும், அனுமதிப்பத்திரங்கள் இருந்து மணல் ஏற்றி வீதியில் செல்லும் போது முறையற்ற விதத்தில் வீதியில் பயணம் மேற்கொண்ட குற்றத்திற்காகவும் பல தரப்பட்ட டிப்பர் வாகனங்கள் போக்குவரத்து பொலிஸார் மற்றும் விசேட குற்ற தடுப்பு பொலிஸாரும் இணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர்.


இவ்வாறன சட்டவிரோத செயற்பாட்டுகளில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்கள் பொலிஸார் மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


[கிளிநொச்சி நிருபர் – பரமசிவன்]








