மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பணிபுரிகின்ற தாதி உத்தியோகஸ்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தியவாறு திங்கட்கிழமை (17.03.2025) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தாதியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் சரியான நீதியைப் பெற்றுக்கொடு, சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் குறைக்கப்பட்டது என்? உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு திங்கட்கிழமை நண்பல் 12.30 மணியளவில் வைத்தியசாலையின் நிருவாக சேவைகளுக்கும், வைத்தியசேவைகளுக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு இவ்வாறு தாதி உத்தியோகஸ்த்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தின்களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் செயலாளர் ஏ.ஜி.எம்.நசூஹான், அரச தாதியர் உத்தியோகத்தர்கள்சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திருமதி.வ.புவிதர், உள்ளிட்ட தாதியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here