எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றது.

குறித்த இந்த கலந்துரையாடல் கனியவள கூட்டுத்தாபன தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ, தற்போதைய கழிவு கொடுப்பனவு நடைமுறையின் கீழ் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கு கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் இணங்கியதாகக் குறிப்பிட்டார்.

குறித்த இரண்டு வாரங்களில் புதிய கழிவு கொடுப்பனவு சூத்திரத்தில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்வதற்குப் பரிந்துரை முன்வைக்கப்படுமாயின் அது தொடர்பாக ஆராயப்படும் என கனியவள கூட்டுத்தாபன தலைவர் குறிப்பிட்டதாகவும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here