காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஒரே இரவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மற்றும் மத்திய காசாவில் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா நகரின் மையத்தில் அமையப்பெற்றுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன் தினமும் இஸ்ரேலிய இராணுவம் ஷெல் தாக்குதல் மேற்கொண்டது.

இதன்போது 10 குழந்தைகள் உட்பட 16 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் நேற்று மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் வீடொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீவிரவாதிகளை இலக்கு வைத்து காசா பகுதி முழுவதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here