Monday, June 8, 2026
No menu items!

இராணுவம்

போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த புதிய தேசிய செயல்பாட்டு மையம் நிறுவப்பட்டது ஜனாதிபதி அறிவிப்பு!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (30) கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் "ரதம ஏகத" தேசிய செயல்பாட்டுத் திட்டம் பங்கேற்று உரையாற்றிய போதே, போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த போலிஸ், இராணுவம், சுங்கம், குடிவரவு, குடியகல்வுத் துறை, மோட்டார் போக்குவரத்து மற்றும் புலனாய்வு சேவைகள் ஒன்றிணைந்த தேசிய செயல்பாட்டு மையம்...

மாதோட்ட ரஜமகா விகாரையில் இடம் பெற்ற வெசாக் தின நிகழ்வு..!

மன்னார் மாதோட்ட ரஜமகா விகாரையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (12.05.2025) மாலை வெசாக் தின நிகழ்வுகள் இடம் பெற்றன. மாதோட்ட ரஜ மகா விகாரையின் விகாராதிபதி தலைமையில் குறித்த வெசாக் நிகழ்வுகள் இடம் பெற்றன. இதன் போது பொலிஸார், இராணுவம், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு தானம் வழங்கி வைக்கப்பட்டது.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் பலி..!

இந்திய படைகளின் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய கிராமங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அத்துமீறலில் ஈடுபட்டது. பூஞ்ச், பாரமுல்லா, ரஜவுரி, குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களின் கிராமங்களை குறிவைத்து சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பதுங்கு குழிகளில் ஒளிந்து கொண்டனர். சிலர் பாதுகாப்பான இடங்களை...

பாகிஸ்தானின் மூன்று இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட இந்தியா!

இந்திய ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் ஏழு பேர் பலியானதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தனது இராணுவம் ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், சில இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இராணுவத்தின் பிடியிலிருந்த ஒருதொகுதி காணிகள் விடுவிப்பு!

யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்துவந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கபடு மக்களின் பயன்பாட்டிற்காக இன்றையதினம் ஒப்படைக்கப்பட்டன. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத்  அவர்களினால் யாழ் மாவட்ட செயலர் பிரதீபன்  அவர்களிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள்  இன்றையதினம் முற்பகல் 11.30 மணியளவில் (01.05.2025) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக்...

16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை தடை செய்த இந்திய அரசு!

ஜம்மு காஷ்மீரில் நடந்த துயரமான பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தின் பின்னணியில், இந்தியா, அதன் இராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத உணர்வுப்பூர்வமான உள்ளடக்கம், தவறான மற்றும் தவறான கதைகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் பேரில், 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்திய அரசு தடை...

பாராளுமன்ற பிரதான நுழைவு வாயில் பழுது..!

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயில் (தம்பதொர) பழுதடைந்துள்ளமையினால் இராணுவத்தினரை ஈடுபடுத்தி சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசேட நிகழ்வுகளின்போது ஜனாதிபதியோ அல்லது பிற நாட்டுத் தலைவர்களோ இந்த செப்புக் கதவு வழியாகத்தான் பாராளுமன்றத்துக்குள் நுழைவார்கள். அறிக்கையின்படி, செப்புக் கதவை உயர்த்தவும் குறைக்கவும் பயன்படுத்தப்படும் "தாங்கி" பாகங்கள் தேய்ந்துவிட்டன. செப்புக் கதவு பழுதுபார்ப்பதற்குத் தேவையான...

பெருந்தொகையான கஞ்சா மீட்பு – சந்தேகநபர்கள் மாயம்..!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 154 பொதிகளில் அடங்கிய 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா இன்று சனிக்கிழமை (3/22/2025) கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த  கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்...

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியமை குறித்து ஹம்சிகா ராஜ்குமாரின் குற்றச்சாட்டு!

எமது நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் இழைத்த யுத்த குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலையே பெண் வைத்தியரை முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க நேரிட்டது என யாழ் தீவக பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் ஹம்சிகா ராஜ்குமார் குற்றச்சாட்டினார். நேற்று திங்கட்கிழமை அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்...

பாகிஸ்தானில் 30 பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் பயணிகள் தொடருந்தை பயங்கரவாதிகள் நேற்று (11) சிறைபிடித்தனர். அதில் பயணம் செய்த 30 பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500 ற்கும் மேற்பட்ட பயணிகள், பணயக் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டனர். உலகளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பணயக் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள 104 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். ஏனைய பயணிகளை மீட்கும்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img