ஈரானுக்கு எதிராக மீண்டும் வலுவான தாக்குதல்களை நடத்த தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகளை நடத்த ஈரான் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதலை நடத்த தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து அவர் கூறுகையில்: “நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாக தாக்குவோம்.. ஒரு கட்டத்தில் அவர்கள் ‘இதை இனி தாங்க முடியாது’ என கூறுவார்கள்”_ என தெரிவித்தார்.

இதற்கிடையில், அமெரிக்கா ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற எரிசக்தி வசதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உட்கட்டமைப்பு வசதிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் போர்குற்ற வகையின் கீழ் வரக்கூடும் என மனித உரிமை மற்றும் ஆலோசனை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here