கல்ஓயா தொடருந்து நிலையத்துக்கு அருகே மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மீனகயா தொடருந்து காட்டு யானைக் கூட்டமொன்றுடன் மோதியதில் 5 யானைகள் உயிரிழந்தன.

அத்துடன் குறித்த தொடருந்தின் இயந்திரம் தடம்புரண்டுள்ளது.

இதன்காரணமாக மட்டக்களப்பு – கொழும்பு தொடருந்து மார்க்கத்தில் சேவை பாதிப்படைந்துள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு 11.20 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தடம்புரண்டுள்ள தொடருந்தை மீள் தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here