கல்கமுவ, மீ ஓயாவுக்கு அருகில் உள்ள பாலுகடவல சந்திக்கு அருகில் உள்ள தற்காலிக கடை ஒன்றிற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று நடத்திய தாக்குதலில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (01) அதிகாலை இடம்பெற்ற இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் உயிரிழந்தவர் திரப்பனை பகுதியிலிருந்து வந்து கல்கமுவவில் வாழ்வாதாரம் நடத்தி வந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த அவரது 18 வயதுடைய மகன் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் குறித்த இடத்தில் சிறிய கூடாரம் ஒன்றை அமைத்து நீண்ட காலமாக தர்பூசணி மற்றும் மரக்கறிகளை விற்பனை செய்து வாழ்வாதாரம் நடத்தி வந்துள்ளதுடன், அதிகாலை வேளையில் கடையில் தங்கியிருந்த போது இந்த காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here