மட்டக்களப்பு – மகிழவெட்டுவான் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் தமது 3 வயதுக் குழந்தையுடன் வீட்டிலிருந்த சந்தர்ப்பத்தில் காட்டு யானை, தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதன்போது குறித்த குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.








