வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும், எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தங்களுடைய சங்கத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களை புதிதாகத் தேர்ந்தெடுத்தனர்.

இந்த தெரிவு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் அவர்களது நீண்டகால போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது.

       -பிரதான பதவியாளர்கள்:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தலைவர்: யோகராஜா கனகரஞ்சினி

செயலாளர்: சி. ஜெனிற்றா

     -மாவட்டத் தலைவர்கள்:

யாழ்ப்பாணம் – சி. இளங்கோதை

மட்டக்களப்பு – வ. அமலநாயகி

அம்பாறை – வ. செல்வராணி

திருகோணமலை – எஸ். செபஸ்ரியான்தேவி

வவுனியா – சி. ஜெனிற்றா

முல்லைத்தீவு – ப. வீரமணி

கிளிநொச்சி – க. கோகிலவாணி

மன்னார் – கு. உதயசந்திரன்

இந்த புதிய நிர்வாக அமைப்பின் கீழ், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிப்போராட்டம் மேலும் பலப்படுத்தப்பட்டு, உண்மை மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் தொடரப்படும் என சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

(யாழ் நிருபர்- லோஜன் விஜய்குமார்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here