காலாவதியான ஊழல் அரசியல் கலாசாரத்துடன் பாடசாலைகளுக்குச் செல்லமாட்டோம் எனவும், பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான சாதகமான தலையீடுகளை மேற்கொள்வதாகவும் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் தனது குடிமைப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக தான் பாடசாலைகளுக்குச் செல்வதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகள் நிகழ்வுகளுக்காக மாத்திரம் பாடசாலைகளுக்குள் சென்று அந்த நிகழ்வுகளுக்கு பெருமளவு பணம் செலவழித்ததற்கு உதாரணங்களும் இருப்பதாக பிரதியமைச்சர் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குச் சென்று பாடசாலை மாணவர்களின் பிரச்சினைகளுக்கும், பாடசாலைகளில் உள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக தலையிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
களனிமுல்லை நயாகரா ஹோட்டலில் நேற்று (30) இடம்பெற்ற அதிதான – ஓய்வுபெற்ற இராணுவ கூட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொலன்னாவ கல்வி கோட்டத்தில் 18 பாடசாலைகள் உள்ளதாகவும், அந்த பாடசாலைகளில் நிலவும் நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் அந்த பாடசாலைகளுடன் தொடர்ந்து தொடர்புகளை பேண வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.








