வெல்லம்பிட்டி – சேதவத்தை பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 200,000 கிலோ கிராம் சம்பா அரிசி மீட்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபைக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது குறித்த அரிசி தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிசி தொகை கடந்த வருடம் ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, அரிசி இறக்குமதி செய்ய தனியார் பிரிவினருக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னதாக இறக்குமதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here