அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க Meta நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனவரி 06, 2021 அன்று, கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க கேபிடல் கட்டிடத்தைத் தாக்கியபோது, டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் உட்பட மெட்டாவுக்குச் சொந்தமான கணக்குகளை செயலிழக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்ததாகவும், டொனால்ட் டிரம்ப் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இழப்பீட்டுத் தொகையில் 22 மில்லியன் டொலர்கள் ட்ரம்ப்பினால் நிறுவப்படும் ஜனாதிபதி நூலகத்திற்கு வழங்கப்படும் எனவும் மீதித் தொகை சட்டச் செலவுகளாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக இதற்கு முன் எதிர்ப்பு தெரிவித்த மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட பல முக்கிய தொழிலதிபர்கள் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.








