2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் காலை 11 மணிவரையிலான நிலவரப்படி ,
திருக்கோணமலை மாவட்டத்தில் 28 சதவீத வாக்குகளும் , இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகளும், கேகாலை மாவட்டத்தில் 25 சதவீத வாக்குகளும் பதிவு செய்ய்பட்டுள்ளன.
அத்துடன், மன்னார் மாவட்டத்தில் 26 சதவீத வாக்குகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் 22 சதவீத வாக்குகளும், திகாமடுல்ல மாவட்டத்தில் 26 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







