கிளிநொச்சி புளியம் பொக்கனை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட முசிரம்பிட்டி பகுதியில் இன்று (12.02.2025) பொது கிணற்றில் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் 29 வயதுடைய சற்குணராசா பிரதீபன் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இறந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here