சிறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
அது தொடர்பான வழக்கு நடவடிக்கைகளுக்காகவே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.







