கிரான்ட்பாஸ் நாகலகம் வீதி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உந்துருளியில் வருகை தந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் கிரான்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 22 வயது, மற்றும் 28 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

காயமடைந்தவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான மோதர நிபுனவின் அடியாட்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான சேதவத்த கசுனின் தரப்பினரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here