ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பால் காலமானார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்புக்குப் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தி, நேற்று இரவு அபுதாபியில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது, வீரர்களின் உடைமாற்ற அறைக்குள் வெல்லாலகேவிற்கு தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்.
இச்சம்பவம் இலங்கை அணியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








