அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் கிடைக்காமல் செய்யும் செயற்பாட்டில் கிளிநொச்சி கமநல காப்புறுதிச்சபை ஈடுபட்டுள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த போகத்தில் நெற்செய்கையின் போது ஏற்பட்ட அனர்த்தங்களால் விவசாயிகள் பரியப் பாதிப்பை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த விவசாயிகளுக்கு சுற்று நிருபத்தைக் காரணம் காட்டி கிளிநொச்சி கமநல காப்புறுதிச்சபை இழப்பீடுகள் கிடைக்காமல் செய்யும் வகையில் செயற்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் தலைவர் சுப்பிரமணியம் யதீஸ்வரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பயிர்களுக்கு ஏற்பட்ட பேரழிவுக்கு கமநல காப்புறுதி சபை நியாயமான தீர்வை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here