கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக்கழிவை உடனடியாக 24 மணித்தியாலத்துக்குள் அகற்றி சுகாதாரத்தை பேண தவறினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் செயற்படும் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மலக்கழிவு வெளியேறுகின்ற நிலையில் உரிய அதிகாரிகளுக்கு சுகாதார துறையினர் சுகாதாரத்தை பேணுமாறு தெரிவித்த நிலையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.


இந்நிலையில் நேற்றைய தினம் (1/8/2025) கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் சென்ற நிலையிலே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ரட்னசிங்கம் – முரளிதரன்]







