கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுதொழில் பெண் முயற்சியாளர் குழுக்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சந்தித்தார்.

அங்கு சிவஞானம் சிறீதரன் உரையாற்றுகையில்,

தமிழரசுக்கட்சி சிறீதரன் கிளிநொச்சியில் இவ்வளவு காலமும் என்ன செய்தார்கள் என எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர்.மூன்று பிரதேச சபைகள் மூலம் வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியிருந்தோம், கிளிநொச்சி மாவட்டத்திற்கு  தீயணைப்பு பிரிவை ஏற்படுத்தியிருந்தோம், கிளிநொச்சி  நகரசபை உருவாக்குவதற்கான முயற்சிகளை செய்தோம், கிளிநொச்சி வைத்தியசாலையின் பெண்கள் நோயியல் பிரிவு வடக்கு மாகாண சபை எமது கைவசம் இருந்த போது பல தெருக்கள் காப்பற் மாகாண சபை எங்களிடம் இருந்த போதே பல கோடி ரூபா செலவில் செய்தோம் பல விடயங்களை சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கிறோம்.

கிளிநொச்சி வைத்திய சாலையின் அபிவிருத்திக்கு  அத்திவாரம் இட்ட  படத்தை பலர் விமர்சனத்திற்கு பயன்படுத்துகின்றனர்.நாம் பாதிக்கப்பட்ட இனம் 2009ற்கு பிறகு நடந்த இனப் படுகொலைக்கு  சர்வதேச விசாரணையை கோரிநிற்கின்றோம்.  காணாமல் போனவர்களுக்கு நீதி கோரி குரல் கொடுக்கின்றோம். அரசாங்கத்தில் உள்ளவர்கள் இந்த விடயங்களை பேசுவார்களா?  பேசுவார்கள் நீங்க தந்த வாக்குமூலம் ஜெனீவா வரை சென்று  சர்வதேசம் வரை நீதியை வலியுறுத்தியுள்ளேன்.

எமது இனத்தின் புகழுக்காக பயங்கரமாக  இருந்த காலம்  2010அந்த காலம்  சுட்டுப்போடுகின்ற காலம் துணிந்து அரசியலுக்கு எமது இனத்திற்காக வந்திருந்தேன். மைத்திரி ஜனாதிபதியாக இருந்த போது  நான் 2016ம்  பாராளுமன்றத்தில் அவரை சந்தித்து   துயிலுமில்லத்தில் நினைவேந்தலை செய்ய அனுமதி தருமாறு கோரியிருந்தேன். யோசித்து சொல்லுகிறேன் என்றார். அதற்கு பின்பே மக்கள் நினைவேந்தல் செய்ய முடிந்தது. நினைவேந்தல் மூலம் சர்வதேசம் எங்களை பார்க்கிறது .

எனது அலுவலகத்தில் குண்டு வைத்தார்கள். எனது செயலாளர்களை கைது செய்தனர். இலங்கை தமிழரசுக்கட்சியிலிருந்து என்னை  களைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, அது நடக்காது. நாங்கள் நாங்களாகவே இருப்பதாக இருந்தால்  கட்சிக்கு கிடைக்கிற ஆசனங்கள் தான் பலமாக இருக்கும் ஆசனங்கள் கிடைக்காது விட்டால்  தமிழரசுக்கட்சி என்கின்ற கட்சி இல்லாமல் போய்விடும். நான் பொது வேட்பாளரை ஆதரித்தமைக்கான காரணம்  சர்வதேச விசாரணை சமஸ்டி தீர்வு போன்ற விடயங்களுக்காகவும்  மாவட்ட கிளை தீர்மானித்திற்கு கட்டுப்பட்டு ஆதரித்தேன் காலம் பதில் சொல்லும்.  ஒருவரின் பதவி ஆசை கட்சிக்குள் உள்ளவர்கள் வழக்கு  போட்டு  தலைவராக செயற்படாது தடுத்தார்கள் அதனையும் தாண்டி   வல்லமையுடன் நிற்கிறேன்.

அரங்கிலிருந்து இல்லாமல் போனால் பேச முடியாது போகும் . 15வருட அரசியல் கரடுமுரடான பாதையில் தான் பயணிக்கிறேன். சிறீதரன் பார் அனுமதி பெற்று கொடுத்ததாக சொல்கின்றனர்.சிறீதரனுக்கு வாக்குபோடாமல் செய்வதற்கு சொல்கின்ற உண்மை இல்லாத  அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக பேசப்படுகின்ற கருத்து என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here