கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா இன்றையதினம் சிறப்புற இடம்பெற்றிருந்தது.

கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் அவர்களின் தலைமையில் ஆரம்பமான இவ் விளையாட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் M.R மோகனதாஸ்,மாவட்ட மேசைபந்தாட்ட பயிற்றுனர் ச.குமார் அவர்களும் கிளிநொச்சி மக்கள் அமைப்பின் சார்பில் விளையாட்டு இணைப்பாளர் கலாதரன் ஆகியோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும்இந்நிகழ்வில்சிரேஸ்ரபொலீஸ்அத்தியட்சகர்,கண்டாவளைபிரதேசசெயலாளர்,மாவட்டபுள்ளிவிபரவியலாளர்,உதவிமாவட்டச்செயலாளர்,மாகாண விவசாயப்பணிப்பாளர்,மாவட்ட விளையாட்டு பயிற்றுனர்கள்,விளையாட்டுக்கழகங்களின் அங்கத்தவர்கள்,போட்டியாளர்கள்,

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,விளையாட்டு ஆர்வலர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here