யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரால் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 227 போத்தல் கோடாவும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது.
குறித்த சந்தேக நபர் கொழும்புத்துறையிலும் வட்டுக்கோட்டையிலும் வீடுகளை வாடகைக்கு எடுத்து கசிப்பு காய்ச்சி பல இடங்களில் விற்பனையில் ஈடுபட்டாரென பொலிஸார் தெரிவித்தனர் என எமது பிராந்திய செய்தியாளார் தெரிவித்துள்ளார்.








