சமைக்கும்போது வெறும் சுவைக்காக மாத்திரம் வெங்காயம் சேர்க்கப்படுவதில்லை.

வெங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் போல் வேறு எதிலும் இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

இதுவொரு பூண்டுத் தாவரம் ஆகும்.

வெங்காயத்தில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து,விட்டமின் சி, கார்போஹைட்ரேட், பொட்டாசியம், விட்டமின் பி போன்ற பல சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.

வெங்காயத்திலுள்ள பிரக்டோலிகோ சாக்கரைடுகள் குடலிலுள்ள நல்ல பக்டீரியாக்களுக்கு உணவளிக்கும் ப்ரீபயோடிக்குகளாக செயல்படும்.

இதனால் உணவு முழுமையாக சமிபாடடைந்து நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.

இதிலுள்ள கரிம சல்பர் கலவைகள் உடலிலுள்ள கொழுப்பைக் கரைத்து இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here