கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக விவசாயக் பீட வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த தர்மசீலன் ரகுராஜ் 34 வயதுடைய காவலர் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த பாதுகாவலர் விவசாய பீடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று கிளிநாச்சி மாவட்ட தடயவியல் பொலிஸ் உத்தியோத்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிபதி அவர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டதின் பின்னர் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)







