அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 05 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டை, வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களை அடைவதற்கு திறம்பட பயன்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (18) நடைபெற்றது.

“க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தலைமையில் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் உள்ள சார்டட் கட்டடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

“க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் தொடர்பில் ஒவ்வொரு நிறுவனமும் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள், அதன்போது எழுந்துள்ள சவால்கள் மற்றும் நிதித் தேவைகள் குறித்து விரிவாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here