இந்திய பல்துறை மானிய உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் விரிவான அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
உட்கட்டமைப்பு,வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கல்வி,சுகாதாரம்,விவசாயம்,மீன்பிடி,சுற்றுலா,சமூக வலுவூட்டல் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.








