கிழக்கு மாகாணத்தை NPPஅரசாங்கத்தால் நிர்வகிக்க முடியாவிட்டால் எங்களிடம் தாருங்கள் எனநாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இன்று (03.03.2025) திங்கட்கிழமை வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
அத்துடன், இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்க முடியாவிட்டால் எங்களிடம் தாருங்கள் எனவும் கோரிக்கை விடுத்தார்.








