குயில்வத்தை பகுதியில் மூடப்பட்டிருந்த ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதி தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
குயில்வத்தை பகுதியில் இன்று (15) அதிகாலை 1 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண் குன்று ஒன்று சரிந்து விழுந்ததால் அந்த வீதி முழுமையாக மூடப்பட்டிருந்தது.
எனினும் தற்போது போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ஒரு பாதை திறக்கப்பட்டுள்ளது. எனினும் மேலும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.








