தற்போதுள்ள குடிநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கடந்த ஜூலை 16ம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், எரிபொருள், இரசாயன பொருட்கள், வட்டிக்கிரயம் போன்றவற்றின் விலை குறைப்பை கருத்தில் கொண்டு இந்த குடிநீர் கட்டண திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தற்போதுள்ள நீர்க்கட்டணங்கள் 2023.08.01 அன்று தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறித்த கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை அமுல்படுத்துவதற்காக 2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் 2024.07.16 ஆம் திகதியிலிருந்து இலங்கை மின்சார சபை மின்சாரக் கட்டணத்தை குறைத்துள்ளமையாலும், எரிபொருள், இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் வட்டிக் கிரயம் போன்றவற்றின் செலவு குறைவடைந்திருப்பதாலும், நீர்க்கட்டணத்தை ஓரளவு வீதத்தில் குறைப்பதற்கான இயலுமை காணப்படுகின்றது.

இதன்படி, சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் நகர்ப்புற தோட்ட வீடுகள் தவிர்ந்த வீட்டு அலகுகளுக்கு  7% மாகவும், அரச மருத்துவமனைகளுக்கு 4.5% மாகவும், பாடசாலைகள் மற்றும் வணக்கத் தலங்களுக்கு 6.3%மாகவும்  அத்துடன் ஒட்டுமொத்த குறைக்கப்பட்ட தொகை 5.94% மாகவும் நீர்க்கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here