விசுவல் கெப்பிடலிஸ் Visual Capitalist இணையத்தளத்தின் படி, உலகில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை 120-வது இடத்தில் உள்ளது.

இந்த தரவரிசை சர்வதேச தொழிலாளர் அமைப்பு – ILO தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. நாடுகளின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அந்த நாடுகளின் கொள்முதல் திறன் – Purchasing Power ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் கொள்முதல் திறனின் படி அமெரிக்க டொலர் 200
(இலங்கை ரூபாவில் தோராயமாக ரூபாய் 66,000) என கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கீழே உள்ள நாடுகளாக நைஜர், பூட்டான், ஹைட்டி, கினியா, கானா, காம்பியா ஆகியன பெயரிடப்பட்டுள்ளன.

ஆசியாவில் அதிகபட்சமாக ஊதியம் வழங்கும் நாடாக தென் கொரியா பெயரிடப்பட்டுள்ளது. அங்கு 2,366  அமெரிக்க டொலர் கொள்முதல் திறன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொள்முதல் திறன் அமெரிக்க டொலர் 3,804 என்ற அடிப்படையில் சுவிட்சர்லாந்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here