2023 ஆம் ஆண்டு மண்சரிவில் வீடுகளை இழந்து 3.5 வருடங்களாக பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்த பூனாகலை, கபரகல பகுதியைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கான “நவோதயபுரம்” வீட்டுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று கையளித்தார்.

இலங்கை இராணுவ பொறியியல் படையினரின் தீவிர பங்களிப்புடன் இந்த திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மலையக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் அமையப்பெற்றுள்ளதாக பாடப்பட்டுள்ளது.

மலையக மக்கள் இலங்கையின் சம உரிமை குடிமக்கள் அவர்களுக்கான முழு உரிமைகளும் கண்ணியமும் கிடைக்க வேண்டும் என இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நூற்றாண்டுகளாக அவர்கள் அனுபவித்த கஷ்டங்களை அடுத்த தலைமுறைக்கு தொடர அனுமதிப்பது அநீதி ஆகும். நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் அனைவருக்கும் சிறந்த வாழ்கையை உறுதிப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது.

இதேநேரம் யுத்தத்தால் இந்தியாவில் வாழ்பவர்கள் யுத்தத்தின் போது நாட்டை விட்டு வெளியேறி தற்போது இந்தியாவில் வாழும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் தடைகளை நீக்க அமைச்சரவை சமீபத்தில் தீர்மானித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வரவிருக்கும் வரவு செலவு திட்டத்தில் வீடமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தோட்ட நிறுவனங்களுடனான எதிர்கால ஒப்பந்தங்களில் மலையக சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் ஏற்பாடுகள் காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, மத்திய மலைநாட்டை “நாட்டின் இதயம்” என வர்ணித்தார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அறிவித்தார்.

மேலும் குறித்த திட்டத்திற்கு பங்களித்த அனைவருக்கும், குறிப்பாக இராணுவ பொறியியல் படையினருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here