நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 538 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
977 பேரை இன்னும் காணவில்லை எனவும் இவர்களில் 517 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள தேசிய பேரிடர் அபாய தடுப்பு மற்றும் முகாமைத்துவ ஆணைக்குழு NDRRMA தேடுதல், மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடர்வதாக தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் அணித்திரட்டப்பட்டுள்ளதோடு
சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களால் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல ஹெலிகோப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன
கடந்த புதன்கிழமை (26) அன்று இமயமலையில் பனிப்பாறை உடைந்ததால் பாரிய அளவிலான வெள்ளம் ஏற்பட்டது. நீர், பாறைகள், பனி, சேறு மற்றும் குப்பைகள் நேபாள-சீன எல்லை பகுதியில் உள்ள ஆற்று அமைப்புகள் வழியாக பாய்ந்தன.
இதனால் ஆறுகளை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சாலைகள், பாலங்கள், எல்லை வசதிகள் போன்ற முக்கிய உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதோடு அந்த பகுதியில் வசித்த மக்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இதேவேளை தேங்கியுள்ள நீரால் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால் ஆற்று அமைப்புகளை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்
இது சமீப காலங்களில் அந்த நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது.






