மீகொடை – நாகஹவத்தை பகுதியில் கடந்த 14ஆம் திகதி மகிழுந்தில் பயணித்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த 19ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபரும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, நேற்றைய தினம் ஹோமாகம மற்றும் மீகொடை ஆகிய பகுதிகளில் குறித்த கொலையுடன் தொடர்புடைய மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதானவர்கள் 22, 26 மற்றும் 38 வயதுடைய பாதுக்கை மற்றும் மீகொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.








