முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நாளைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மருந்து இறக்குமதி தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு மருந்துகள் இறக்குமதி செய்தமை தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல முன்னதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் ஏற்கனவே இந்த முறைப்பாடு தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தங்களது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட உள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நாளைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மருந்து இறக்குமதி தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு மருந்துகள் இறக்குமதி செய்தமை தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல முன்னதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் ஏற்கனவே இந்த முறைப்பாடு தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தங்களது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட உள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here