இரு வேறு பகுதிகளில் குளவி கொட்டுக்கு இலக்காகிய ஜவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி ஒருவரும் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கும் சாமிமலை பகுதியில் உள்ள ஓல்ட் டன் தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டு இருந்த பெண் தொழிலாளி இருவர் உட்பட மூன்று பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் ஜந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளதார்.








