தனுசை பற்றி டாக்டர் ஒருவர் மோசமாக பேசிய தகவல் குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் நெப்போலின் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தனுசைப் பற்றி மோசமா பேசிய டாக்டர்
நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் கடந்த 7ம் திகதி மிகவும் பிரமாண்டமாக ஜப்பானில் நடைபெற்றது. இதில் மிகவும் பிரபலமான நடிகை, நடிகர்கள் கலந்துகொண்டு தம்பதிகளை ஆசீர்வதித்தனர்.
தனுஷ் திருமணம் நடைபெற்றதில் இருந்து இணையத்தில் பல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் தனுஷ் தசைப்பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரால் எழும்பி நடக்கவோ சாதாரண மனிதர் செய்யும் எதையும் செய்ய முடியாது. இதன் காரணமாகவே இணையத்தில் பல விமர்சனங்கள் வருகின்றன.
தனுஷூக்கு இந்த திருமணம் தேவையா என்றும், ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்கள் என்றும், தனுஷால் இல்லற வாழ்க்கையில் ஈடுபடமுடியாது என்றும் பலவிதமான மோசமான கருத்துக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
இது குறித்து நெப்போலியன் பேசியுள்ளார். நெப்போலியன் குறிப்பாக மகனை பற்றி பேசிய ஒரு வைத்தியரின் கருத்து பற்றி கவலையுடன் பகிர்ந்துள்ளார். அவர் கூறும் போது நான் உதவி செய்தால் அதை யாருக்கும் தெரியப்படுத்த மாட்டேன்.
அது என் மனைவியை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் நாம் செய்த எல்லாவற்றையும் மறந்து மற்றவர்கள் விமர்சிக்கும் போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. இதனால் நான் செய்த உதவியில் ஒன்றை கூறும் கட்டாயத்தில் உள்ளேன்.








