ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தனது பிரச்சார முயற்சிகள் உண்மையானவை என, சமூக ஊடகங்களில் மக்கள் கூட்டம் இல்லாத தேர்தல் பிரசாரம் தொடர்பான காணொளி ஒன்று பரவியதற்கு பதிலளித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்ததன் பின்னர், அபிவிருத்திக்காக பாடுபட முயற்சித்ததாகவும், பல தடைகளை எதிர்நோக்க நேரிட்டதாகவும் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இந்த நாட்டு மக்கள் அதற்குத் தயாராக இல்லை என்றால், அதுவே தமது விருப்பமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜே.பியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், பல முக்கிய அரசியல் கட்சிகளினால் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தனது மனசாட்சிக்கு விரோதமாக அவ்வாறான கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தினால் அழைப்பை நிராகரித்ததாகவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவிவரும் தனது தேர்தல் பேரணியின் காணொளி பொதுமக்களின் அரசியல் அறிவாற்றலை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.







