இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மாமியார் கொலை செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (27.12.2024) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்பத் தகராறு காரணமாக, கொலை செய்யப்பட்டவரின் மருமகனால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் புலத்கொஹுபிட்டிய, எஹெலியகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடையவர் ஆவார்.
சம்பவத்தையடுத்து, சந்தேக நபரான மருமகன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








