காலி, உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லேனகம பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் செவ்வாய்க்கிழமை (03.12.2024) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி, உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 02 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








