இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்களை வடமேற்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வடமேற்கு கடற்பகுதியில் குதிரைமலை முனைக்கு அப்பால் கடற்பரப்பில் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கான நான்கு இந்திய மீன்பிடி படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கற்பிட்டி கடற்படை கப்பல் நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here