புத்தளம், கற்பிட்டி, குடாவ கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பீடி இலை பொதிகள் மற்றும் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1,042 கிலோகிராம் பீடி இலைகள் (33 பொதிகள்)  மற்றும் 02 படகுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பீடி இலை பொதிகள் மற்றும் படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மேல் மாகாண கலால் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here