கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலிப் பகுதியில் 24/07 புதன்கிழமை காலை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4டிப்பர் வாகனங்கள் கொடிகாமப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடத்தற்பளை-கெற்பேலிப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் ஒருவர் தப்பித்துள்ள நிலையில் மற்றைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here