கொலன்ன பிரதேசத்தில் நபர் ஒருவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர், மித்ததெனிய முருங்கஸ்யாய பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் துப்பாக்கியை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி கொலன்ன, உப்தன்வத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தற்போது வெளிநாட்டில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here