கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு , மாத்தளை, மாவனல்லை மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21 முதல் 32 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








